பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow துணுக்காய் பலநோக்குக் கூ.சங்கத்திற்கு 14 கோடி ரூபா சொத்திழப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

துணுக்காய் பலநோக்குக் கூ.சங்கத்திற்கு 14 கோடி ரூபா சொத்திழப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 28 July 2008

இலங்கைப்  படையினரது ஆக்கிரமிப்பு நடடிக்கைகளால் ஏற்பட்ட சொத்தழிவு, மற்றும் இடப்பெயர்வுகள் காரணமாக, துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 14 கோடி ரூபா சொத்திழப்பு ஏற்பட்டுள்ளது

முல்லைத்தீவு, துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் தங்கராசா இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளில் இயங்கிவந்த 13 கிளை நிலையங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

அத்துடன், மல்லாவி நகரில் இயங்கிவந்த கூட்டுறவு மாதிரி  விற்பனை நிலையம், கூட்டுறவு அரிசி ஆலை, கூட்டுறவு வெதுப்பகம், கூட்டுறவுக் களஞ்சியம், கிராமிய கூட்டுறவு வைப்பகம், துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பணிமனை என்பனவும் இடம்பெயர்ந்துள்ளன. 

இலங்கைப் படையினரது தாக்குதல்கள் காரணமாக மேலும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்களும், பொருள்களும் இழக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாதாந்தம் தேவைப்படும் 30 மெட்றிக் தொன் அரிசி, மற்றும் அதற்கான நெல் என்பவற்றைக் களஞ்சியப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படும் விவசாய விளை பொருள்களைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் சந்தைப்படுத்தி வருவதுடன், கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகளையும், உள்ளுர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவித்து வந்திருந்தது.

துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இடப்பெயர்வினால் விவசாயிகள், உள்ளுர் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..