பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ஆழ ஊடுருவும் படை உறுப்பினரின் சடலம் கையளிக்கப்பட்டது - கொல்லப்பட்டவர் புலிகளின் சீருடையினை அணிந்திரு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஆழ ஊடுருவும் படை உறுப்பினரின் சடலம் கையளிக்கப்பட்டது - கொல்லப்பட்டவர் புலிகளின் சீருடையினை அணிந்திரு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 28 July 2008

இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் இன்று பி எப் - எல் ரீ ரீ  ஈ எனப்படும்  தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் படை மீட்டுள்ளது.

இதனையடுத்து அந்தச் சடலத்தை  தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இன்று கையளித்தனர்.

இவர் அண்மையில்  கொக்காவிலில் வைத்து  பூநகரி செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சாந்தலிங்கம் விமலகுமார்  கிளைமோர் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமையை அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.

இவர் மக்கள் படையினால் கொல்லப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையினை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அண்மையில் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட 30 உடலங்களில் 4 உடலங்களை அடையாளம் காண முடியவில்லை எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலர் பாவரசன் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..