பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: அதிகாரி உட்பட இருவர் பலி- இருவர் படுகாய
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: அதிகாரி உட்பட இருவர் பலி- இருவர் படுகாய அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 01 August 2008

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளை இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் தாக்கியழிக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அதிகாரி உட்பட மூன்று அதிரடிப்படையினர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அதிகாரி தரத்தினைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..