|
புலிகளிடமிருந்து வடக்கை மீட்டு தேர்தலை நடத்திப் பாருங்கள் - அரசாங்கத்திற்கு சிவாஜிங்கம் சவால் |
|
|
|
Friday, 01 August 2008 |
|
விடுதலைப் புலிகளை வடக்கிலிருந்து முற்றாகத் தோற்கடித்து அங்கே மாகாணசபைத் தேர்தல்களை நடத்தப் போவதாக சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் பரப்புரைகளில் எந்தவித சாத்தியங்களும் இல்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேநேரத்தில் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கில் ஜனநாயகம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுவதில் எதுவித உண்மையும் இல்லை. கிழக்கில் துணை இராணுவக் குழுவினரது குண்டர் ஆட்சியே நடைபெறுகின்றது.
வடக்கை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் பார்க்கலாம் என அவர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு சிவாஜிங்கம் சவால் விடுத்துள்ளார்.
இந்த வருடத்தினுள் புலிகளைத் தோற்கடித்து வடக்கைக் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவர் என சில அமைச்சர்கள் தெரிவித்த போதும் சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த வருட இறுதியில் போரை முடிவுக்குள் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்திருந்ததையும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருடல் இணையம்
|