|
மன்னார் களமுனைக்கு நகர்த்தப்பட்ட கேணல் தீபன்: கொழும்பு ஊடகம் |
|
|
|
Sunday, 03 August 2008 |
|
வவுனியா - மன்னார் களமுனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் நகர்த்தப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வவுனிக்குளத்தில் மோதல்கள் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வவுனியா - மன்னார் களமுனைக்கு விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் நகர்த்தப்பட்டுள்ளார்.
வடபோர் முனை கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்த கேணல் தீபன் கிளாலி-முகமாலை-நகர்கோவில் களமுனைகளில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்திருந்தவர்.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 'தீச்சுவாலை' நடவடிக்கையை முறியடித்ததில் கேணல் தீபன் முக்கிய பங்காற்றியிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|