பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்'
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 02 August 2008

மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இம்மோதல்களில் பெருமளவான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 65-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

13 மணிநேரத்திற்கும் அதிகமாக நீடித்த மோதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டு 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..