பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow "சார்க் கூட்டமைப்பில் சிறிலங்காவே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் உள்ள நாடு"
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

"சார்க் கூட்டமைப்பில் சிறிலங்காவே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் உள்ள நாடு" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 02 August 2008

சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்கா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடாகும் என்று ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆசிய மனித உரிமை மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தென்னாசிப் பிராந்திய கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்காவே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு.

தென்னாசியப் பிராந்திய நாடுகளின் மனித உரிமை செயற்பாடுகளுக்கான சுட்டெண் தரவரிசையில் நாடுகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் வருமாறு.

சிறிலங்கா - 52 புள்ளிகள்

பங்களாதேஷ் - 45 புள்ளிகள்

பூட்டான் - 43 புள்ளிகள்

பாகிஸ்தான் - 41 புள்ளிகள்

நேபாளம் - 24 புள்ளிகள்

இந்தியா - 24 புள்ளிகள்

மாலைதீவு - 23 புள்ளிகள்

ஆப்கானிஸ்தான் இந்த புள்ளிவிபரங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இச்சுட்டென் கணிப்பீட்டுக்காக ஒன்பது காரணிகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

அரசியல் சுதந்திரம், உயிர்வாழ்வதற்கான உரிமை, நீதி- நீர்வாகம், தேசிய மனித உரிமைகளின் செயற்திறன், ஊடக சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறார் உரிமை மீதான வன்முறை, சிறுபான்மை இனத்தவர் மீதான வன்முறைகள், மனித உரிமைகளை நிலைநாட்ட முயல்பவர்கள் மீதான வன்முறை போன்ற காரணிகள் கருத்தில் எடுக்கப்பட்டிருந்தன.

இக்காரணிகளின் அடிப்படையில் தென்னாசியப் பிராந்தியத்தில் சிறிலங்காவே மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..