பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ஓட்டமாவடியில் 13 குடிசைகள் ஒட்டுக்குழுக்களினால் தீவைத்து எரிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஓட்டமாவடியில் 13 குடிசைகள் ஒட்டுக்குழுக்களினால் தீவைத்து எரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 02 August 2008

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஒட்டமாவடி மாஞ்சோலை தமிழ்-முஸ்லிம் எல்லைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான 13 குடிசைகள் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 8.30மணியளவில் இந்த கிராமத்துக்குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் இந்த தீவைப்பு செயலை புரிந்ததாக அப்பகுதி தகவல்கள் முரசுக்கு தெரிவித்தன.

இந்த பகுதியில் இருந்த மக்கள் கடந்த காலங்களில் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் காரணமா இரவு வேளைகளில் ஓட்டமாவடி பிரதேசங்களில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளின் தங்கிவருவதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவைப்பு காரணமாக 13 குடும்பங்களின் சொத்துகள் முற்றாக அழிந்துபோயுள்ளதாகவும் இதன் காரணமாக பல இலட்சம் ரூபா நஸ்டம் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..