|
"சார்க்" மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்திருந்த யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் முடிவ |
|
|
|
Sunday, 03 August 2008 |
|
“சார்க்” மாநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள்ää அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.
சார்க்” நாடுகளின் மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்த போதும். அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் அரசாங்கப்படையினர் வன்னியில் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் முகமாலையில் படையினர் நேற்று தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமுனைத்தளபதி கேனல் தீபன், வன்னிக்களமுனைக்கு அழைக்கப்பட்டதாக சிங்கள செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்தே படையினர் எறிகனைகளை வீசியும் துப்பாக்கி வேட்டுக்களை தீhத்தும் தமது சந்தோசத்தை பகிர்ந்துக்கொண்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன
நெருடல் இணையம்
|