பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், படுகொலைகள் ஆகியவற்றை மேற்கொண்டு வரும் அரசில் அங்கம் வகிக்கும், அமெரிக்க குடியுரிமை கொண்ட அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா, தனது நாட்டு குடிமகன்கள் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரும் அந்நாட்டு அரச தவைரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடிமகன். அவருக்கு கலிபோர்னியாவின் டிமாஸ் பகுதியில் வீடு உண்டு என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இன்னொரு சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவும் அமெரிக்க குடிமகன். அவருக்கு கலிபோர்னியா பொன்டேனா பகுதியில் வீடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவில் வசிக்கும் தகுதியளிக்கக்கூடிய கிறீன் கார்ட் உடையவர். அவருக்கு ஒக்கலாமா பகுதியில் வீடு உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

சேர்பியாவின் மிலோசவிக், பொஸ்னியாவின் கராடிக், சூடானின் ஓமர் பசீர் ஆகியோர் மேற்கொண்ட - அல்லது அதனைவிட பாரதூரமான - இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் மூன்று அமெரிக்க குடிமகன்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தயாராகிவருகின்றது.

இதுவிடயத்தை தக்க ஆதாரங்களுடன் அமெரிக்க அரசின் பார்வைக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் புரூஸ் பெய்னின் தலைமையில் இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழ்ர்கள் அமைப்பு  நடவடிக்கை எடுத்துவருகிறது.

போர்க்குற்றங்களை புரியும் அமெரிக்க குடிமகன்களையும் குடிமகன் அல்லாதவர்களையும்கூட அமெரிக்கச் சட்டம் கடுமையாக தண்டிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..