|
மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பல மணிநேரம் நடைபெற்ற கடும் சமரில் படையினருக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் படையினரின் ஆயுதங்கள் பலவையும் சடலம் ஒன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.(படம் இணைப்பு)
இந்த மோதலில் தமது தரப்பில்ஆறு படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தின் கடைசி எல்லையாக இருக்கும் வெள்ளாங்குளத்தை சனிக்கிழமை மாலை கைப்பற்றியதாக படையினர் அறிவித்தனர். கடும் சமரின் மத்தியில் இப் பகுதியை தாங்கள் கைப்பற்றியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் இருதரப்புக்குமிடையே காலை முதல் கடும் சமர் நடைபெற்றுள்ளது.
முன்னேறிய படையினர் மீது விடுதலைப்புலிகள் இரு தடவைகள் பாரிய தாக்குதல்களைத் அதனைத் தாங்கள் முறியடித்துவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
முற்பகல் 11.35 மணியளவிலும் மாலை 4.30 மணி மற்றும் மாலை 6.05 மணியளவில் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன. இத் தாக்குதலில்
ஆர்.பி.ஜி - 01
ஆர்.பி.ஜி எறிகணை - 01
ரி.56 - 02 ரகத் துப்பாக்கி - 01
குண்டு - 23
கிளைமோர் - 03
லிங்குடன் ஏ.கே.ரவைகள் - 745
ஏ.கே.ரவை - 8162
என்பன விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேநேரம், மணலாறு பகுதியில் கிரிப்பன்வெவவுக்கு வடக்கே நடைபெற்ற மோதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|