பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow தென்மராட்சியில் கைக்குண்டு வெடித்து 3 இராணுவத்தினர் பலி; இருவர் காயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தென்மராட்சியில் கைக்குண்டு வெடித்து 3 இராணுவத்தினர் பலி; இருவர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 04 August 2008

தென்மராட்சி தனங்கிளப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைக்குண்டொன்று வெடித்ததில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கைக்குண்டொன்று தவறுதலாக வெடித்த போதே அங்கு கடமையிலிருந்த மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன், இரு படையினர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம், இராணுவத்தினரும் இராணுவ பொலிஸாரும் தனித்தனி விசாரணைகளை நடத்தி வருவதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரு படையினரும் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த மூன்று படையினரது உடல்களும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..