பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow குஞ்சுக்குளத்தில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்- உடலம் உட்பட படைப்பொருட்கள
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

குஞ்சுக்குளத்தில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்- உடலம் உட்பட படைப்பொருட்கள அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 05 August 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 19 படையினர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:

கிளைமோர் - 01

ரி56-02 ரக துப்பாக்கி - 01

ரவைக்கூடுகள் - 05

நடுத்தர ரவைகள் - 150

தலைக்கவசம் - 01

தண்ணீர்க்கலங்கள் - 04

தொடுகம்பிச்சுருள் - 01

குண்டு - 01

ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02

பை - 01

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..