|
இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள் நிறுத்தப்பட்டுள்ளன |
|
|
|
Tuesday, 05 August 2008 |
|
இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் சிறீலங்கா வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள், நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நாள்தோறும், சிறீலங்கா வான்படையினர் ஒவ்வொருவரின் உணவுத்
தேவைகளுக்கும், தலா இருநூற்று எண்பது ரூபா செலவிடப்பட்டு
வந்த நிலையில், திறைசேரியில் நிலவும் நிதிநெருக்கடிகளுக்கு
ஈடுகொடுக்கும் வகையில், வான்படையினருக்கான இரவுநேர
பால்தேனீர் வழங்கல்களை நிறுத்துவதற்கான கட்டளையை,
பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்~ பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, தற்பொழுது இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும்
ஒவ்வொரு சிறீலங்கா வான்படையினருக்கும், பால்தேனீருக்குப்
பதிலாக கொத்தமல்லி இரசம் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
மோப்ப நாய்களின் உணவுத் தேவைகளுக்காக, நாள்தோறும் தலா
ஐநூறு ரூபாவை செலவிடும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு,
தமக்காக இருநூற்று எண்பது ரூபாவை செலவிடுவதற்கு
பின்னடிப்பதாக, வான்படை அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நெருடல் இணையம்
|