பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பெரும் எண்ணிக்கையிலானோர் கிளிநொச்சிக்கு இடம் பெயர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 05 August 2008

அரசாங்கப்   படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதல் காரணமாகச் சுமார் 100000 த்திற்கும் மேற்பட்டோர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகக் கொழும்பு இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

மடு மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் 75000 பேரும் துணுக்காய் பிரதேசத்தில் 1500 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 1500 பேரும் இடம்பெயர்ந்துள்ளதாகக் கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூநகரிப் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சகல மக்களும் முழங்காவில் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாகக் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு. வேதநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 2000 மாணவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..