|
பெரும் எண்ணிக்கையிலானோர் கிளிநொச்சிக்கு இடம் பெயர்வு |
|
|
|
Tuesday, 05 August 2008 |
|
அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதல் காரணமாகச் சுமார் 100000 த்திற்கும் மேற்பட்டோர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகக் கொழும்பு இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
மடு மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் 75000 பேரும் துணுக்காய் பிரதேசத்தில் 1500 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 1500 பேரும் இடம்பெயர்ந்துள்ளதாகக் கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூநகரிப் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சகல மக்களும் முழங்காவில் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாகக் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு. வேதநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 2000 மாணவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|