பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் பலி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 05 August 2008

மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில்  கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய  தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வுத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அப்பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி கொமாண்டோக்கள் ஆறு பேர் தாக்குதல் நடத்துவதற்கான  நடவடிக்கையில் ஈடுபட்டபோது விடுதலைப் புலிகளின் உள்ளக பாதுகாப்பு அணியினர் இத்தாக்குதலை நடத்தினர்.

இதில் சிறிலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

மற்றைய உடலத்தை தப்பிய நான்கு படையினர் இழுத்துச்சென்றனர்.

தப்பிய படையினரை சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மீட்டுக்கொண்டு சென்றது என்றும் அந்த தளம் தெரிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..