|
விடுதலைப்புலிகள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் 23 படையினர் பலி |
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
மட்டக்களப்பு குடும்பிமலை பெரியவட்டுவான் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயணம் செய்த உழவுஇயந்திரத்தை இலக்குவைத்து நேற்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளேமோர் தாக்குதலில் காயமடைந்த படையினர் மட்டக்களப்பு வெலிக்கந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இத் தாக்குதலின் பின்னர் அப்பகுதியில் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலானது இவ்வாண்டிலே மேற்கொள்ளப்பட்ட பாரிய கிளேமோர் தாக்குதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தாக்குதல் தொடர்பான படையினருக்கு பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டபோதும் படைத்தரப்பிலிருந்து ஒருவர் இறந்ததாகவும் மூவர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பினர் தகவலை மறைத்துள்ளனர்.
நெருடல் இணையம்
|