|
வன்னியில் உள்ள கல்விப் பொதுத் தராத உயர்தர பரீட்சைக்கான மாணவர்களின் நிர்க்கதி நிலை |
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளபோதும் வன்னியில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பாடசாலைகளில் தாக்குதல்கள் காரணமாகப் பரீட்சை மையங்களும் அமைக்கப்படவில்லை.
வன்னியில் இலங்கை வான்படை மற்றும் தரைப்படையினரின் தாக்குதல்கள் காரணமாகக் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தைக் கொண்டுள்ள 55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பரீட்சை நிலையங்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக அமைக்கப்படவில்லை.
இதேவேளை வன்னிக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமையால் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பாக உரிய சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
நெருடல் இணையம்
|