பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மணலாறில் ஐந்து முனை முன்நகர்வு முறியடிப்பு: படையினரின் நான்கு உடலங்கள் மீட்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மணலாறில் ஐந்து முனை முன்நகர்வு முறியடிப்பு: படையினரின் நான்கு உடலங்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 07 August 2008

மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் ஐந்து முனைகளில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர்.

இந்த பெருமெடுப்பிலான நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் நால்வரின் உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:

 

ஆர்.பி.ஜிக்கள் - 02

ஏ.கே.எல்.எம்.ஜி - 01 

ரி-56 ரக துப்பாக்கிகள் - 04

ஆர்.பி.ஜி எறிகணைகள் - 07

ஆர்.பி.ஜி புறப்பலர்கள் - 07

தலைக்கவசங்கள் - 03

ரவைத்தடுப்பு அணிகள் - 03

ஜக்கற் ரவைக்கூடுதாங்கிகள் - 07

ஏ.கே ரவைக்கூடுகள் - 19

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..