பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒரு வயது குழந்தை பலி- 16 பேர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 07 August 2008

முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மருத்துவமனை, அரச அதிபர் இல்லம், மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1:00 மணியளிவில் சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் மருத்துவமனையிலிருந்த ஒரு வயது குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்தது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி திருமதி ரேணுகா உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையை அண்டிய நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம், குமரபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளை நோக்கி நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..