பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதல்: ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதல்: ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 09 August 2008

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் ஆசிரியரான சு.தயாபரன் (வயது 45), க.பசுங்களி (வயது 35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.

இதில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..