|
பிரித்தானிய உயரதிகாரிகள் குழு வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் |
|
|
|
Saturday, 09 August 2008 |
|
பிரித்தானிய உயர் அதிகாரிகள் குழுவொன்று வன்னியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங் உள்ளிட்ட குழுவினர் வன்னியில் உள்ள பாதுகாப்பு படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்காகப் பிரித்தானிய அதிகாரிகள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
வன்னிப் பிரதேசத்திற்கான இராணுவக் கமாண்டார் மேஜர் ஜகத் ஜயசூரியவை குடிங் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய இராணுவ முன்நகர்வுகள், அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களின் நிலைமை, இடம்பெயர்ந்த மக்களது நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|