|
வவுனியாவில் மும்முனை முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்பு: 15 படையினர் பலி! 29 படையினர் காயம் |
|
|
|
Friday, 08 August 2008 |
|
வவுனியாவில் சிறீலங்காப் படையினரால் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 29 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை 7.10 மணி முதல் மாலை 6 மணிவரை வவுனியா நவ்வி மற்றும் குஞ்சுக்குளம் ஆகிய பகுதிகள் நோக்கி சிறீலங்காப் படையினரால் மும்முனை முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர். படையினருக்கு ஆதரவாக எறிகணைச் சூட்டாதரவு மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவும் வழங்க படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர்.
படையினரின் முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக போராளிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினர் தரப்பில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டதோடு, படைக் கருவிகளும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.
இதேபோன்று நேற்றும் இப்பகுதிகள் ஊடாக சிறீலங்காப் படையினர் மும்முனைகளில் ஈடுபட்டனர். இந்த முன்னேற்ற முயற்சிகளும் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 9 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நெருடல் இணையம்
|