பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வவுனியாவில் மும்முனை முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்பு: 15 படையினர் பலி! 29 படையினர் காயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வவுனியாவில் மும்முனை முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்பு: 15 படையினர் பலி! 29 படையினர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 08 August 2008

வவுனியாவில் சிறீலங்காப் படையினரால் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 29 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை 7.10 மணி முதல் மாலை 6 மணிவரை வவுனியா நவ்வி மற்றும் குஞ்சுக்குளம் ஆகிய பகுதிகள் நோக்கி சிறீலங்காப் படையினரால் மும்முனை முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர். படையினருக்கு  ஆதரவாக எறிகணைச் சூட்டாதரவு மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவும் வழங்க படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர்.

படையினரின் முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக போராளிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினர் தரப்பில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டதோடு, படைக் கருவிகளும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோன்று நேற்றும் இப்பகுதிகள் ஊடாக சிறீலங்காப் படையினர் மும்முனைகளில் ஈடுபட்டனர். இந்த முன்னேற்ற முயற்சிகளும் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 9 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..