பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

புலிகளின் வலிந்த தாக்குதல்களால் சிறிலங்காப் படையினருக்கு கடும் இழப்பு: கொழும்பு ஊடகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 August 2008

சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தற்போது வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இது படையினருக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

படையினரின் பல முன்நகர்வுகளுக்கு எதிர்ப்பை மட்டும் காட்டிவந்த விடுதலைப் புலிகள் கடந்த முதலாம் நாளில் இருந்து கடுமையான எதிர்த்தாக்குதல்களையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இது படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

மல்லாவிக்கு தென்புறமாக தமது நிலைகளை பலப்படுத்தி வந்த படையினரின் 57 ஆவது வலிந்த தாக்குதல் படையணி மீது விடுதலைப் புலிகளின் இம்ரான்-பாண்டியன் மற்றும் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணிகள் கடுமையான தாக்குதலை நடத்தின.

பதுங்குகுழிகளை அமைத்துக்கொண்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் திடீர் தாக்குதலை தொடுத்திருந்தன.

மல்லாவி மற்றும் துணுக்காய் பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக இரு வாரங்களுக்கு முன்னர் படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்த நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றன.

இம்மோதல்களின் போது காயமடைந்த படையினரை மீட்டுவரச் சென்ற படையினரின் வாகனத்தின் மீதும் விடுதலைப் புலிகள் பதுங்கி தாக்குதலை நடத்தினர். 

வாகனத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய ஆர்பிஜி தாக்குதலில் அதன் சாரதியும், அதில் பயணித்த இரு படையினரும் கொல்லப்பட்டனர்.

மோதல்களில் 20 படையினர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 50-க்கும் அதிகமான படையயினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை கல்விளான் பகுதியிலும் நிலைகொண்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தினர்.

இதில், 7 படையினர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போயிருந்தார். கல்விளான் துணுக்காய் பகுதிக்கு 2 கி.மீ தென்புறமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

படைத்தரப்பு அதிக இழப்புக்களைச் சந்தித்ததனைத் தொடர்ந்து படையினர் தற்போது இரு பல்குழல் உந்துகணை செலுத்திகளை அப்பகுதிக்கு நகர்த்தியுள்ளதுடன், கடுமையான தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களை தடுப்பதற்காக படையினர் தற்போது பல்குழல் உந்துகணை செலுத்திகளை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றது.

மன்னாரின் வடக்குப்புறமாக வெள்ளாங்குளம் நோக்கி நகர்ந்துள்ள படையினரின் 58 ஆவது படையணியினர் 25 கி.மீ தொலைவில் உள்ள பூநகரியை கைப்பற்றும் நோக்கத்துடன் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகளை கைப்பற்றும் முகமாகவே படையினர் பூநகரி நோக்கிய நகர்வை மேற்கொள்ள திட்மிட்டுள்ளது.

மேலும் வன்னியின் முன்னணி களமுனைகளில் இருந்து மகளிர் படையணிகளை விலக்கிக்கொண்ட விடுதலைப் புலிகள், அங்கு தமது சிறப்பு படையணிகளான சாள்ஸ் அன்ரனி மற்றும் இம்ரான்-பாண்டியன் படையணிகளை நகர்த்தியுள்ளனர்.

மல்லாவி மற்றும் துணுக்காய் பகுதிகளில் 700-க்கும் அதிகமான சிறப்பு படையினரை விடுதலைப் புலிகள் நகர்த்தியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..