பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

முல்லை. அரசாங்க அதிபரைக் கொலை செய்ய முயற்சித்ததை வன்னித் தளபதி ஜெகத் ஜெயசூரிய ஒத்துக்கொண்டுள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 August 2008

கடந்த 8ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலை, அரசாங்க அதிபர் இல்லம் ஆகியவற்றினை இலக்கு வைத்து மணலாறு முன்னரங்கு நிலையிலிருந்து ஏவப்பட்ட எறிகணை வீச்சில் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர்...

திருமதி.இமெல்டா சுகுமார் கையில் மட்டும் காயமடைந்து உயிர்தப்பினார்.

எனினும் இத்தாக்குதலில் ஒன்றரை வயதான குழந்தை உடல் சிதறிப் பலியானது. 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வைத்தியசாலைக் கட்டிடம், பல வீடுகள், பொதுக்கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் கால்நடைகள் பலியாகின.

எனினும் அரசாங்க அதிபர் உயிர் தப்பியதை அறிந்து கொண்ட இலங்கை  இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இத்தாக்குதலை தாம் நடாத்தவில்லையென வழமைபோல் தெரிவித்துக் கொண்டார்.

எனினும் நேற்று வன்னிக் கட்டளைத் தளபதியைச் சந்தித்த வன்னிப்பகுதிக்கான நான்கு அரசாங்க அதிபர்களின் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த மேஜர். ஜென்ரல். ஜெகத்  ஜெயசூரிய இத்தாக்குதலைத் தமது படையினரே மேற்கொண்டதாகவும்,

அதேபோன்று வன்னிப்பகுதியில் நடக்கும் கிளைமோர்த் தாக்குதல்களையும் தாமே மேற்கொள்வதாகவும் ஒப்புக்கொண்டார்.

எனினும் யுத்தம் நடக்கும் ஒரு பிரதேசத்தில் தம்மிடம் பாதுகாப்பு உத்தரவாதத்தை எதிர்பார்க்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதன்மூலம் இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவின் பொய்ப் பிரச்சாரத்துக்கு வன்னித் தளபதி ஆப்பு வைத்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..