பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியாவில் மும்முனை ஊடுருவல் தாக்குதல் முறியடிப்பு: 15 படையினர் பலி, 20 பேர் காயம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 August 2008

வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதலில் படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை தொடக்கம் நேற்று முன்தினம் பிற்பகல் வரை இப்பகுதிகளில் மூன்று முனைகளில் படையினர் ஊடுருவல் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.

படையினருக்கு உதவியாகப்  பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும், ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் இலங்கைப் படையினர் பின்தளங்களிலிருந்து தாக்குதலை நடத்த படையினர் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனர்.

இவ்வூடுருவிய படையினர் மீது தீவிர எதிர்த்தாக்குதலை விடுதலைப்  புலிகள் நடத்தினர். இதில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அதிகாரிகள் உட்பட 15 படையினர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். 20 ற்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களின் பின்னர் அப்பகுதியில் தேடுதலை நடத்திய விடுதலைப் புலிகள் படைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..