பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? “லக்பிம” ஆய்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 August 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? என்பது குறித்து இன்றைய “லக்பிம’ நாளேடு ஆராய்ந்துள்ளது.







தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், முன்னர் இந்த இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகக் கருத்துரைத்திருந்ததாக “லக்பிம” குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தாம் இயக்கத்தில் இருந்தபோது “அமோனியம் நைதரேட்” டை அடிப்படையாகக் கொண்ட இரசாயன ஆயுதங்களை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எனினும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் தனக்கு தெரியாது என்றும் கருணா தெரிவித்துள்ளதாக “லக்பிம” கூறியுள்ளது.

அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும் என படைத் தரப்பும் தெரிவித்துள்ளது.

இவ் இராசயந்த்தால் பாதிக்கப்பட்டால் குழந்தை பாக்கியம் இல்லமல் போய்விடும்
என்பது குறிப்பிடத்தக்கது,மற்றும் உடனடியான மரணம் நிச்சயம் அல்லது சிறிலங்கா படைகளினது உரோமங்கள் எல்லாம் கொட்டி மொட்டையாய் ஒன்றுக்கும் முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்க வேண்டி வரும் என தகவல்கள் தெரிவிக்கைன்றன‌.

குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பதை விட்டு விட்டும், பலாமரத்தடியில் கால மரண்மடைய வேண்டியவர்கள் இங்கே பனையடியில் இரசாயன் தாக்குதலுக்கு உள்ளாகப் போகிறார்கள்

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது கேணல் தீபன் தலைமையில் வன்னியில் யுத்தத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜூலை 29 ஆம் திகதி படையினரின் ஆழ ஊடுருவும் பிரிவினர் தாக்குதல் நடத்துவதற்காக, வன்னியின் மாங்குளம் மற்றும் கொக்காவில் பகுதிகளுக்குச் சென்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஏனைய நால்வர், இலங்கை வான்படையினரின் உலங்கு வானூர்தியினால் காப்பாற்றப்பட்டதாகவும் லக்பிம தெரிவித்துள்ளது.


 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..