|
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை - கொலையாளிகள் இனங் காணப்படவில்லை |
|
|
|
Sunday, 17 August 2008 |
|
பிரித்தானியா குரொய்டனில் இடம்பெற்ற தெருச் சண்டையில் 17 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகிச் சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளார்.
நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்னபூரணா உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) - கலா (நெல்லியடி) தம்பதிகளின் புதல்வனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்செய்தி தமிழகத்திற்குச் சென்றுள்ள உள்ள அவரது தாயாருக்கு அறிவிக்கப்பட்டு அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பவுள்ளார்.
இக்கொலை தொடர்பாக அவ்விடத்திற்கு ஒரு மணியளவில் வந்திறங்கியதாகச் சொல்லப்படும் வெள்ளை இனத்தவர் ஒருவரைப் பொலிசார் விசாரிக்க விரும்புகின்றனர்.
அந்நபரைக் கொண்டுவந்து இறக்கியதாகச் சாட்சியங்கள் தெரிவித்த புளு மொன்டீயோ மினிகப் சாரதியைப் பொலிசார் தொடர்பு கொள்ளும்படி கேட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|