|
வவுனியாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 11 படையினர் பலி- 19 பேர் காயம் |
|
|
|
Sunday, 17 August 2008 |
|
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பிற்பகல் 4:30 மணிவரை தீவிர தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் படைத்தரப்பில் இழப்புக்கள் ஏற்பட, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.
இதில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.
நெருடல் இணையம்
|