பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அம்பாறையில் சிறிலங்காப் படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி- நால்வர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 August 2008

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்காப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு 9:15 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் 40 மில்லிமீற்றர் எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

இத்தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். நால்வர் படுகாயமடைந்தார்.

இதேவேளை, கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது நேற்று முன்நாள் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று படையினரில் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம், கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் நேற்று முன்நாள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..