பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி்; 20 பேர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 August 2008

முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆட்லெறி மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் நாச்சிக்குடாப் பகுதி ஊடாகவும் அதனை அண்டிய பகுதிகள் ஊடாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர்.

இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இருபதுக்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள் மற்றும் படைப் பொருட்கள் நடுநிலைப் பகுதியில் (சூனியப் பிரதேசம்) சிதறிக் காணப்படுகின்றன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..