பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் – இராமநாதன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 August 2008

இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் என அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ரஞ்சன் இராமநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் என அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ரஞ்சன் இராமநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இலங்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வரும் எமது சொந்தங்களுக்கு ஒபாமா ஆதரவு வழங்குவார் எனப் பெரிதும் எதிர்பார்ப்பதாக இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் எனத் திடமாக நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பரக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் ஒபாமா நிதி பெற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிற்காகப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்ரனுக்கு ஏற்கனவே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பணம் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

2300 அமெரிக்க டொலர்களைப் புலி ஆதரவாளர்களில் முக்கிய நபரான ஹிலாரி கிளின்ரனுக்கு ரஞ்சன் இராமநாதன் வழங்கியதாகப் பிரபல ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதான செயற்பாட்டாளர் எனத் தெரியவந்ததை அடுத்து பெறப்பட்ட நிதி திருப்பி கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்போருக்கு இராமநாதன் நிதியுதவி அளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குப் பொஸ்னிய முறையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என அமெரிக்கத் தமிழர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் அமெரிக்காவில் இயங்கி வருவதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..