பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 5 படையினர் பலி; 7 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 August 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாலமோட்டை குஞ்சுக்குளம் ஊடாக நேற்று வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தியின் சூட்டாதரவுடன் முன்நகர்வினையும் ஊடுருவல் நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏழு படையினர் காயமடைந்தனர்.

படையினரின் உடலம் உள்ளிட்ட படைப் பொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

நேற்றிரவு வரை படையினரின் முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் தொடர்ந்தது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..