பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நெருக்கடியான சூழல்களைக் கடந்து நகரும் எமது போராட்டம்: க.வே.பாலகுமாரன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 23 August 2008

நெருக்கடியான சூழல்களைக் கடந்து எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் ஒன்றுகூடலில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது விடுதலைப் போராட்டம், நெருக்கடியான சூழல்களைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் பெரும் விலைகளைக் கொடுத்தே விடுதலையை வென்றெடுத்திருக்கின்றன.

எமது விடுதலைப் போராட்டமும் பல அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் புரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று எதிரியானவன் மூர்க்கமான தாக்குதல்களை எமது மக்கள் மீது நிகழ்த்தி வல்வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் எமது விடுதலை இயக்கம், எதிரிகளுக்கு தகுந்த பதிலடியை கொடுக்கும்.

கடந்த கால போராட்ட காலங்களில் மக்கள் படையே பெரும் வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர்.

உலக விடுதலைப் போராட்டங்களிலும் மக்களின் பெரும் பங்களிப்புடனேயே விடுதலை வென்றெடுக்கப்பட்டிருக்கின்றது என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..