பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இப்படியும் சில பைத்தியங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 October 2005
 4500 பவுண்டஸ் தொகையை ஒரு மாதம் தாரை வார்ப்பது எப்படி என்று உங்களுக்கு அறிய ஆசையாக இருக்கின்றதா? ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த Paisley என்ற 19வயது இளைஞனைக் கேளுங்கள். சென்ற வருடம் SMS எனப்படும் குறுந்தகவல்களை அனுப்பிய கட்டணமாக 4500 பவுண்டஸ் செலுத்தியுள்ளான். இவன் தன் வேலையையும் ராஜிநாமா செய்திருக்கிறான். காரணம் தன் நிறுவனக் கணனியை உபயோகித்து ஒரு மாதத்தில் 8000 இணையக் கடிதங்களை இவன் அனுப்பியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
இவன் வாரத்திற்கு 700 வரையிலான குறுந்தகவல்களை அனுப்பும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றான். தனக்கு SMS செய்திகள் அனுப்புவது, PING PONG விளையாடுவது போன்ற குதூகலத்தைக் கொடுக்கிறது என்கிறான் இந்த இளைஞன். இவன் அனுப்பிய இணையக் கடிதங்களில் அனேகமானவை இவன் காதலிக்கே அனுப்பப்பட்டுள்ளன. ஒரு தடவை காதலிக்கு அனுப்புவதாக நினைத்து தன் கடிதத்தை தன்னுடன் பணியாற்றும் ஒரு நண்பனுக்கு தவறுதலாக அனுப்பியதன் விளைவாகவே இவன் குட்டு மேலதிகாரிகளுக்கு அம்பலமாகியது. விசாரணைகளுக்கு முகம் கொடுக்க விரும்பாது இவன் தானாகவே பதவி விலகிக் கொண்டான். இவன் மனநோயாளி என்ற அடிப்படையில் இப்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றான். இளைஞர் சமுதாயத்தில் இப்படி எத்தனை எத்தனை விவகாரங்கள்?

A.J.G
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..