பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அடுத்துவரும் வாரங்களில் வன்னியில் போர் வெடிக்கும்? பெரும் அழிவுகள் நேரலாம் என அச்சம் - ஏ.எவ. பி. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 25 August 2008

கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகர்ந்துகொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தீவிரமான மோதலையும் இரத்தக்களரியையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எவ. பி. செய்தி வெளியிட்டுள்ளது.

அரசபடையினர் தமது முக்கிய இலக்கான கிளிநொச்சியை நெருங்கும் வேளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த இராணுவ ஆய்வாளர்கள் இராாணுவத்தினரின் ஆட்லறி விமான பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் வடக்கில் பெரும் அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவரும் வேளை அவர்கள் அதிகளவு காலாட்படையினரையே நம்பியிக்கவேண்டிய நிலை மாணப்படும் என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பிரிகேடயர் பொட்டேஜ் தெரிவித்துள்ளார். மிக நெருக்கமான சூழலில் இடம்பெறும் மோதலில் ஈடுபடும் நிலையை நோக்கி இருதரப்பும் நகர்ந்து கொண்டுள்ளன எனவும் இந்தச் சூழ்நிலையிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்படலாம் னெவும் தெரிவித்துள்ளனர்.

இராணும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்ற முயலவேண்டும் எனத் தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஆய்வாளர் ஒருவர் இல்லாவிட்டால் நவம்பர் மாத மழை ஆட்லறி பீரங்கிகளின் செயற்திறனைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் ஆபத்தான சூதாட்டத்தில் இராணுவம் மிகவும் ஆபத்தான சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று அகலக்கால் வைக்கும் தவறினை அது செய்கின்றது என்றும் அந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதேவேளை இராணுவத்தினர் சடுதியாக வேகமாக முன்னேறவில்லை. தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு அவர்கள் சிறந்த தந்திரோபாயங்களை மேற்கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி பொட்டேஜ் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளிற்கும் ஆளணிப்ப்பற்றாக்குறைப் பிரச்சனை  இருக்கின்றது தான் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் இராணுவத்தலைமை நம்பிக்கை தெரிவிக்கின்றது.

 எதிர்கொள்ள முடியும் என்கிறார் இராணுவத் தளபதி நாங்கள் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம். எமது எதிர்காலக் இலக்ககள் கடினமாகக் காணப்படும் என்றாலும் எம்மால் எதிர்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பத்திரிகையொன்னிற்குத் தெரிவித்துள்ளார்.

அரசு இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்துவதற்காக இராணுவ வெற்றியை நம்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அரச வட்டாரங்கள் நாடாளுமன்றப் பெரும்பான்மையை எய்துவதற்கு அவசியமாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

எனினும் நீண்ட காலம் நீடிக்கும் மோதல் அரசின் இராணுவ நடவடிக்கைகளை மக்களின் ஆதரவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அரசியல் தீர்வொன்றைக் காணுமாறு இந்தியா இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனடி வெற்றிகள் கிடைக்காவிட்டால் பொருளாதார நெருக்கடிகள் அரசுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..