|
வன்னிக் களமுனையில் இப்போது புலிகளின் எதிர்ப்பு வலுக்கின்றது! ஒப்புக்கொள்கிறது இராணுவம் |
|
|
|
Tuesday, 26 August 2008 |
|
வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது படை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் இராணுவத்தினர் இப்போது அங்கு விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு ஒப்புக்கொண்டிருக்கின்றது.
நாச்சிக்குடாப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னேற முயன்ற படையினர்மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றும் கலியமோட்ட பகுதியில் மூன்று படையினர் காயமடைந்தனர் என்றும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாச்சிக்குடாப் பகுதியில் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். முன்பை விட இப்போது புலிகளின் எதிர்ப்பு மிகவும் மோசமாக இருக்கின்றது என்று இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை வன்னிப் பகுதியில் படையினர் முன்னேற முயற்சிக்கின்ற சகல முனைகளிலும் தமது படையணிகள் மேற்கொண்டு வரும் தந்திரோபாய முறியடிப்புத் தாக்குதல்களின் போது அதிகளவான இராணுவத்தினர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றும் மேலும் பலர் படுகாயமடைகின்றனர் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.
நெருடல் இணையம்
|