பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கிழக்கில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது-பிள்ளையான்குழுவினர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 August 2008

கிழக்குமாகாண மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கமே உள்ளதாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டுள்ளனர் ஒட்டுக்குழுவான பிள்ளையான்குழுவினர்.

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்க கூறிவருகின்றபோதும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பிள்ளையான்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என பிள்ளையான்குழுவின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.

கஞ்சிகுடிச்சாறு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் கடும் நடவடிக்கை எடுத்திருப்பதால் பாரிய அச்சுறுத்தல் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பிள்ளையான்குழுவினரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகளின் முயற்சிகள் தடுக்கப்பட்டிருப்பதாக மௌலானா கூறினார்.

"இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமோ, அல்லது எமக்கு அச்சுறுத்தலான விடயமோ அல்ல. ஆனால் இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடனடி நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளவேண்டும்"என்றும் ஆசாத் மௌலானா கூறினார்.

கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பிள்ளையான்குழு உறுப்பினர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணக்கூடிய வகையிலான தாக்குதல் சம்பவங்களை புலிகள் நடாத்தி வருவதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் மக்களோடு மக்களாக கலந்திருந்தே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..