பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 34 படையினர் பலி; 7 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் மீட அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 02 September 2008

நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 34 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாச்சிக்குடாவை வல்வளைக்கும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் பாரிய முன்னகர்வினை மேற்கொண்டனர்.

முன்நகர்வின் போது சிறிலங்கா படையினர் கனரக போர்க்கலங்களுடன் மிகச்செறிவாக பல்குழல் வெடிகணை, ஆட்டிலெறி எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இம்முன்நகர்வுக்கு எதிரான தாக்குதலை இன்று அதிகாலை 2:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கினர்.

இதில் 34 படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்தனர். படையினரின் ஏழு உடலங்களையும் படையப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்கள் சிதறிக்கிடப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..