பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பணமழையில் நனைகிறார்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 October 2005
Bill Gates12 வருடங்களாக தொடர்ந்து பணமழையில் நீச்சலடிப்பது என்பது எல்லோருக்கும் முடிந்த காரியமா? கணனி உலகின் சக்கரவர்த்தி என்று வர்ணிக்கப்படுகின்ற பில் கேட்ஸ் தொடர்ந்து 12வது வருடமாக அமெரிக்க பணக்காரர் வரிசையில் முதலாவது இடத்தைத் தனதாக்கிக் கொண்டிருக்கின்றார். இந்தச் செய்தியை உலகப் பிரபல்யமான Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ளது. அதே சமயம் அமெரிக்க பணக்காரர்களின் கையிருப்பும் குறிப்பிடும் அளவில் அதிகரித்து இருப்பதாகவும் இச் சஞ்சிகை கூறியிருக்கின்றது.

முதலாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கணனிச் சக்கரவர்த்தியின் சொத்து மதிப்பு 51 பில்லியன் டாலர்கள் என்று கணிப்பிட்டுள்ளார்கள்.
40 பில்லியன் டாலர் தொகையுடன் Warren Buffett. என்ற முதலீட்டு வர்த்தகப் பிரமுகர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவிய பங்காளர்களில் ஒருவராக முன்பிருந்த Paul Allen என்பவர் 22.5 பில்லியன் டாலர் தொகைக்கு சொந்தக்காரராக இருந்து கொண்டு மூன்றாம் இடத்தைத் தனதாக்கி இருக்கின்றார்.  அடுத்த இடமும் கணனி நிறுவன உரிமையாளரான Michael Dell என்பவருக்குப் போயிருக்கின்றது. இன்றைய உலகம் கணனிகளின் உலகம் என்பது மட்டுமல்ல பணம் புரளும் புரட்டும் உலகமும் அதுதான் என்பது நன்றாகவே தெரிகின்றது.

A.J.G
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..