|
நாச்சிக்குடா, வன்னேரி தாக்குதலைத் தொடர்ந்து சரத் பொன்சேகா வவுனியாவிற்கு ஓட்டம் |
|
|
|
Wednesday, 03 September 2008 |
|
கிளிநொச்சி நாச்சிக்குடாவிலும், வன்னேரியிலும் 75 படையினர் கொல்லப்பட்டு, மேலும் 101 படையினர் காயமடைந்துள்ள நிலையில், சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாவிற்குச் சென்றுள்ளார்.
வன்னக்கான சிறீலங்கா படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட பிராந்தியத் தளபதிகள் அனைவரும் களமுனை நிலவரம் தொடர்பாக இதன்போது விளக்கியுள்ளனர்.
வன்னியில் தற்பொழுது விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைச் சந்தித்துவரும் அனைத்துப் படைப் பிரிவுகளின் தளபதிகளும் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
நெருடல் இணையம்
|