பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வன்னியில் பரவலான படைநடவடிக்கைகள் முறியடிப்பு: 75 படையினர் பலி: 100 அதிகமானோர் காயம்: 28உடலங்கள் மீ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 03 September 2008

நாச்சிக்குடாப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய வல்வளைப்பு முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 45 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 100க்கும் அதிகமனோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளன. அத்துடன்  7 உடலங்களையும் படை வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

 நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பெருமெடுப்பிலான பல்குழில் வெடிகணைகள், ஆட்டிலறி பீரங்கித் தாக்குதல், மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் என படையினரது பின்தள சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் பாரிய முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.

படையினரது முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி வரையான 12 மணி நேரம் எதிர்த் தாக்குதலைத் தொடுத்து படையினரது முன்னகர்வுகளை முறியடித்துள்ளனர்.

சிறீலங்காப் படையினருக்கு நேற்றைய எதிர்த் தாக்குதலில் பலத்த உயிரிழப்புகள் மற்றும் ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 45 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 51க்கும் அதிகமான படையினர் காயங்களுக்க உள்ளாகியுள்ளனர். விடுதலைப் புலிகளால் 7 படையினரது சடலங்களையும் படையினர் விட்டுவிட்டுச் சென்ற படைக் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் மூன்று உடலங்கள் சிதைவடைந்து காணப்பட்டதால் அவை நாச்சிக்குடாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகளின் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

இதேபோன்று நேற்றுக் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வெள்ளாங்குளத்திற்கும் அக்கராயன் வன்னேரிக்குளத்திற்கும் இடைப்பட்ட 8ம்,9ம்,10ம் மைல்கல் ஊடாக சமநேரத்தில் பரவலாக முன்னகர்வுகளில் ஈடுபட்ட படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதல்களில் 30 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்னர். மேலும் 50க்கும் அதிகமான படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளர். இப்பகுதியில் சிறீலங்காப் படையினரது 12 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் இரு உடலங்கள் சிதைவடைந்து காணப்பட்டதால் அவை அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.  படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் மற்றும் ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுள்ளததை படையினர் தமது நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..