பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய் - லண்டனிலிருந்து வன்னியன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 03 September 2008

கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும்

மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ32 வீதியில் (நாச்சிக்குடாவிற்கு செல்லும் வீதி ஆரம்பிக்கும் இடம்) அண்மையில் இராணுவம் தரித்து நிற்கின்றது. இவ்விடம் பூநகரியில் இருந்து 21 மைல் தெற்கே அமைந்துள்ளது. அத்தோடு நாச்சிக்குடாச் சந்தியிலிருந்து மேற்காகச் செல்லும் வீதியில் மூன்று மைல் தொலைவிலேயே மேற்குக் கடற்பரப்பின் முக்கியத்துவமான  நாச்சிக்குடா ஓடத்துறை அமைந்துள்ளது. அதனை அடுத்த குமுழமுனை, வலைப்பாடு, பாலாவி ஆகிய ஓடத்துறைகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. எனினும் மேற்குறிப்பிட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு, பாலாவி ஆகியவை பாக்குநீரிணையின்  ஆழ்கடலை அண்மித்தே அமைந்துள்ளன. எனவே இவற்றின் முக்கியத்துவத்தினை புலிகள் உணர்ந்திருக்காதது ஒன்றல்ல. எனினும் இவற்றினை மிஞ்சிய ஒரு இலக்கினை எதிர்பார்த்து காத்திருப்பதனாலேயே நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மை வரையான நகர்வு இராணுவத்திற்குச் சாத்தியமாயிற்று.

நாச்சிக்குடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் அடுத்து வரும் பூநகரி வரையான பகுதி வெறும் பொட்டல் வெளிக் காடுகளையும் சதுப்பு நிலத்தன்மையும் உடைய நிலத் தரைத்தோற்றமாக இருப்பதால் புலிகள் அவ்விடத்தில் நிலைகொள்வது சாத்தியமல்ல. எனவே தாம் வேகமான முன்னகர்வது இலகுவானது என படைத்தரப்பு கணக்குப் போட்டிருக்கிறது.

அத்துடன் வவுனியாவிலிருந்து பார்த்தால் வடக்கு நோக்கி படையினர் நிலைகொண்டுள்ள பகுதி ஒடுங்கல் வலயப் பிரதேசமாகவே காணப்படுகிறது. ஆகவே தாங்கள் நாச்சிக்குடாவரை சென்றுவிட்டால் தாம் முன்னேறிய பாதைகள் எல்லாம் முனைவடிவாகவே இருக்கும் எனவே பக்கவாட்டில் பாதுகாப்பு வழங்குவதற்குரிய பாதுகாப்பு வலயம் போதாது இதனால் விடுதலைப்புலிகள் பக்கவாட்டில் தாக்கினால் முன்னகர்ந்த படையினரின் நிலை அதோ கதிதான்

எனவே 57 வது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர். ஜென்ரல் ஜெகத் டயஸ் துணுக்காய் மல்லாவிப் பகுதியைக் கைப்பற்றாது ஏ32 வீதியில் மேலும் முன்னேறி எதவித பயனும்  இல்லை. இது புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலகுவாக வழிவகுக்கும் எனவும் அவ்வாறு புலிகள் ஒரு ஊடறுப்புத் தாக்குதல்களை நடாத்திவிட்டால் பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படைகளுக்கு பேரிடியாக அமைவதுடன் தப்பியோடும் படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும் என்றென்றி உடனடித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தினார்.

அதாவது ஏ32 வீதியில் முன்னேறும் படையினருக்கு சமாந்தரமாக கிழக்கு நோக்கியிருக்கும் துணுக்காய், மற்றும் மல்லாவி ஆகியவற்றைக் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு செய்வதால் ஏ32 வீதியில் உள்ள படைகளுக்கு பக்கவாட்டு ஆதரவினை வழங்க முடியும் எனவே இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அவர் முனைப்புடன் இருந்தார்.
இதனால் கல்விளான் பகுதியில் இருந்த படையணிகள் (57-3) வெள்ளாங்குளத்தில் உள்ள படையணிகளுடன் (58) இணைந்து தாக்குதலை ஆரம்பித்தனர். அதன்படி 58வது படையணி வெள்ளாங்குளத்திலிருந்து வேட்டையடைப்பு நோக்கி திடீர்ப் பாச்சலை காடுகளினூடாக மேற்கொண்டு அப்பிரதேசத்தைக் கைப்பற்றி உடனடியாக உயிலங்குளம் வரை முன்னகர்ந்திருந்தன. அதேபோல் கல்விளான், ஒட்டங்குளம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள 57-3 படையணி. கல்விளானிலிருந்து கிழக்காக துணுக்காய் நோக்கியும் அதேவேளை ஒட்டங்குளத்திலிருந்து வடக்காக துணுக்காய் நோக்கியும்பாரிய தாக்குதலை மேற்கொண்டனர்.

இத்தாக்குதல்களுக்கு புலிகள் ஆரம்பத்தில் எதிர்ப்புக்காட்டிவந்தனர். ஆனால் உயிலங்குளம் கைப்பற்றப்பட்டபின் அங்கிருந்தும் துணுக்காய் நோக்கிப் படைகள் ஒரு நகர்வை மேற்கொண்டு துணுக்காய் பகுதியில் நிலைகொண்டுள்ள புலிகளை பின்புறமாக வால்வளைப்புச் செய்து அவர்களை கொல்வது அல்லது உயிருடன் பிடிப்பது என்ற நோக்கத்தில் முன்னேறின. இத்தந்திரத்தினை உணர்ந்த புலிகள். தந்திரமாக துணுக்காய் பகுதியில் இருந்து பின்நகர்ந்தனர்.
அதன்பின் அப்பிரதேசத்தைக் கைப்பற்றிய படைகள் தமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இதைக் கொண்டாடின. இது சப்ரகமுவ  மாகாண சபைத்தேர்தலுக்கும் இறுதி நேரப் பிரச்சாரமாக அரசுக்கு அமைந்தன. அத்துடன் இம்மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி கிளிநொச்சியிலிருந்து நாங்கள் 12 கி.மீற்றர்கள் தூரத்தில் நிற்கின்றோம். அக்கராயனையும் பிடித்துவிட்டோம் என்பதே.

உண்மையில் இது சரியான தகவலா என நோக்கினால் இல்லை காரணம்
கடந்த வாரம் அக்கராயன் பகுதிவரை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியுடன் ஒரு தாக்குதல் அணி ஊடுருவி அக்கராயன் வரை நகர்ந்திருந்தன. இவ்வாறே சிறு சிறு குழுக்களாக படைகள் உள் நுழைந்து புலிகளின் இலக்குகளை முன்னும் பின்னுமாக தாக்க புலிகளும் படைகள் படைகள் தமது நிலைகள் மீது பலமாக நுழைந்து விட்டார்கள் என்றென்னி பின்நகர்ந்து விடுவார்கள். இதுவே மன்னார் களமுனையில் படைகள் இதுவரை செய்துவந்த தந்திரோபாயமாகும். அதுபோல் ஒன்றே அக்கராயன் பகுதியிலும் நடந்தன. ஆனால் அத்தாக்குதல் பிசுபிசுத்துப் போயின.
படைகள் அக்கராயன் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தவுடன் ஒரு வீடியோக் கிளிப் ஒன்றை வெளியிட்டன. அதில் அக்கராயன் பகுதியில் தாங்கள் நிற்பதாகவும் அவ்விடத்திலேயே இவை எடுக்கப்பட்டன என படைத்தரப்பு கூறினாலும் அதை ஆதாரப்படுத்துதற்கான ஆதாரம் அதில் இல்லை. இவ்வாறு வீடியோப்பதிவு வெளியிட்ட கையோடு புலிகளின் தாக்குதல் அணிகளின் கண்களின் ஊடுருவிய இராணுவத்தினர் மாட்டுப்பட ஊடுருவிய கையுடனேயே அவர்கள் உயிலங்குளம் வந்துவிட்டனர். ஆனால் படைகள் முதல் வெளியிட்ட வீடியோக் கிளிப்பை வைத்துக்கொண்டு படைகள்பிரச்சாரப் போரில் இறங்கின. தாம் தற்போதும் அக்கராயனிலேயே நிற்பதாகவும் தென்னிலங்கைக்கு மட்டமல்ல. புலம்பெயர் மக்களையும் நம்பச் செய்திருக்கிறது. எனவே படைகள் தற்போது கிளிநொச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் தாங்கள் நிற்கின்றோம் என்று கூறுவதில் எதுவித உண்மையும் இல்லை.

படைகள் தற்போது நிற்கும் உயிலங்குளத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி நகர வேண்டுமாயின் அவர்களுக்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று. உயிலங்குளத்திலிருந்து தேறாங்கண்டல், ஜங்கங்குளம், புத்துவெட்டுவான,; கொக்காவில், முறுகண்டி ஆகியபகுதிகளை அடைந்து உயிலங்குளத்திலிருந்து கிட்டத்தட்ட 23 மைல் தூரத்தில் உள்ள கிளிநொச்சிக்குச் செல்ல வேண்டும்.

இரண்டாவது வழி உயிலங்குளத்திலிருந்து கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளைக் கிட்டத்தட்ட 12 மைல்தூரம் கடந்து அக்கராயன் பகுதியை அடைந்து அக்கராயனில் இருந்து கோணாவிலைக் அடைந்து கிளிநொச்சியை அடைய வேண்டும். அல்லது  அக்கராயனில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள முறுகண்டிச்சந்தி வந்து கிளிநொச்சியை அடைய வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட அக்கராயனுக்கு இடைப்பட்ட பகுதிகளை படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கவில்லை. எனவே இது அப்பட்டமான ஒரு பிரச்சாரமாகும்.

அத்துடன் நாச்சிக்குடாச் சந்திக்குத் தெற்கே உள்ள படைகள் கிளிநொச்சி நோக்கி நகர வேண்டுமாயின் நாச்சிக்குடாவில் இருந்து 4மைல் தூரத்தில் உள்ள பல்லவராயன் கட்டை அடைந்து அங்கிருந்து ஆறுமைல் தூரம் கடந்து ஜெயபுரத்தை அடைந்து அங்கிருந்து கிட்டத்தட்ட 4மைல் தூரத்தில் உள்ள வன்னேரியைத் தாண்டி 5மைல் தூரம் நகர்ந்து அக்கராயனை அடைய வேண்டும். இங்கேயும் அக்கராயன், வன்னேரி தவிர்ந்த எந்தப் பகுதியையும் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கவில்லை. எனவே படைகள் ஆளஊடுருவி பிடிக்கப்பட்ட ஒளிப்பதிவினைக் காட்டி தென்னிலங்கையில் தாம் அக்கராயனைப் பிடித்துவிட்டதாக பிரச்சாரம் பண்ணி படைகளுக்கு ஆட்களைத் திரட்ட முனைகின்றது. இது ஒரு நல்ல தந்திரோபாயமும் கூட அத்துடன் கடந்த சில நாட்களாக காடுகளினூடாகச் சென்று வன்னேரிப்பகுதியைப் பிடிக்க மேற்கொண்ட முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தது. என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன். மேலும் வன்னேரியைப் பிடிக்காது தாங்கள் அக்கராயனை கைப்பற்றிவிட்டோம் எனக் கூறுவதானது அவர்கள் தங்கள் பிரச்சாரப் போரை விஸ்தரித்துள்ளமையையே காட்டுகிறது.

இனி துணுக்காய்ப் பகுதிகளை நோக்கி பார்த்தால் கடந்த 26ஆம் திகதி படைகள் துணுக்காயிலிருந்து துணுக்காய்க்கும் மல்லாவிக்கும் இடையில் உள்ள கொக்காவில் றோட் நோக்கி மேற்கோண்ட பாரிய ஆட்லறியுடன் கூடிய முன்னகர்வு தோல்வியில் முடிந்தது. படைகள் எப்பாடுபட்டாவது மல்லாவி, ஒட்டறுத்தகுளம், வடகாடு ஆகியவற்றைக் கைப்பற்றி வன்னிவிளாங்குளம் மாங்குளம் பகுதிகளை அடைய முனைகின்றது. அத்துடன் மல்லாவி நோக்கிய நகர்வில் துணுக்காயில் இருந்து ஒரு படையணி மாங்குளம் நோக்கியும், வவுனிக்குளம் பகுதியில் உள்ள 57-1 படையணி ஒட்டறுத்த குளம், வடகாடு ஆகியவற்றைக் கைப்பற்றி மல்லாவியைப் பின்புறமாக வால்வளைப்புச்செய்ய முயல்கின்றது.

மேலும் உயிலங்குளத்திலிருக்கும் படைகள் தெற்குப் பக்கமாகத் திரும்பி ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தைக் தடந்து மல்லாவியைப் பின்புறமாக முற்றுகையிட முனைகின்றன. அத்துடன் படைத்தளபதி சரத்பொன்சேகா அடுத்த இரண்டு வாரங்களில் தாம் மல்லாவி, வன்னிவிளாங்குளம், மாங்குளம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி பாலமோடையில் உள்ள புலிகளுக்கு ஆப்பு வைப்போம் எனக்கூறியிருக்கின்றார். அத்துடன் படைகள் பூநகரி நோக்கி எவ்வளவு வேகமாக முனநகர முடியுமோ அவ்வளவு வேகமாக முன்நகர்ந்து பருவமழைக்காலத்திற்கு முன் பூநகரியைக் கைப்பற்ற முனைகிறது. எனவே அடுத்து வரப்போகும் வாரங்கள் படைகளின் நடவடிக்கைகளுக்கு ஆப்பாகும் வாரங்களாக அமையலாம். ஏனெனில் படைத்தரப்பே தாங்கள் அதிகம் இழப்புக்களைச் சந்திப்பதாக கூறியிருக்கின்றது.

தற்போது அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கும் விசயம் வான்புலிகளின் தாக்குதலாகும். கடந்த 26ஆம் திகதி இரவு திருகோணமலைக் கடற்படைத்தளத்திற்கு வான்புலிகள் நடத்திய தாக்குதலில் படைகளுக்க ஆளணி ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையும் படைகளின் பிரச்சாரப் பொரை பிசுபிசுக்க வைத்துவிட்டன. காரணம் வான்புலிகள் இனித் தாக்குதலை நடாத்த முடியாது புலிகளி கட்டுப்பாட்;டுப் பிரதேசங்கள் அனைத்தும் எமது செல் வீச்சுக்குள் வந்துவிட்டன எனவெ வான்புலிகளின் விமானங்கள் மேலெழுந்தால் செல்லாலேயே அவ்விமானங்களை அழித்துவிடுவோம் எனக்கூறி சிங்கள தேசத்தை அல்ல கர்வதேசத்தைக் கூட ஏமாற்றி வந்தது அரசு.

அத்துடன் வான்புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலில் தமக்கு எதுவித இழப்பும் இல்லை என கெகலிய ரம்புக்வெல என்கின்ற கொமடியன் கொமடி பண்ணியிருக்கின்றார். இது பற்றி திருகோணமலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கும் போது காலை ஆறு மணிவரை 14 கடற்படையினரின் சடலங்களைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்தனர். அத்துடன் எமத தமிழ் ஊடகங்கள் 40 படைகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன. இதில் எது உண்மை என்பது சரியாக அறிய முடியவில்லை. ஆனால் வைத்தியசாலையிலிருந்து தெரிவித்த குரல்கள் 14 எனத் தெரிவித்தன.

வன்னியில் படைகள் இதுவரை இருவகை உத்திகளையே பயன்படுத்தியது அதாவது நிவங்களை தாம் மீட்கும் போது அப்பிரதேசத்தில் உள்ள புலிகள் அழிந்து விடுவார்கள் என்பது ஒன்றும், புலிகளை அழித்தால் நிலங்கள் தானாக மீட்கப்படும் என்பது மற்றொன்றுமாக இருந்தது. இதில் படைகளால் நிலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. படைகள் நினைத்தபடி புலிகளை அழிக்க முடியவில்லை. அவர்கள் தந்திரோபாயமாக தமது படைவளங்களுடன் பின்நகர்ந்தே வந்தனர். ஒவ்வொரு களமுனையிலும் புலிகள் தந்திரோபாயமாகப் பின்நகரும் போது படைகளுக்கு கனிசமான இழப்புக்களை ஏற்படுத்திவிட்டே செல்கின்றனர். மாறாக புலிகளின் வளங்கள் (நிலத்தைத் தவிர) எதனையும் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.
படைகள் இந்த நடவடிக்கைக்கு கொட்டிய பணம் மதிப்பிட முடியாது.

நாளை களமுனை நிலமைகள் மலைகீழாக மாறினால் நிலமையை சிந்தித்துப் பாருங்கள் நாட்டின் பொருளாதாரம் எதுவரை சென்றுவிடும் என்று. ஆனால் புலிகள் தமது படைபலத்தை பாதுகாப்பாக நகர்த்தி இறுதி யுத்தம் நடைபெறும் போது பயன்படுத்தினால் படைகளின் நிலமை செர்ல்ல வெண்டிதில்லை. அத்துடன் வன்னி மீதான நடவடிக்கைக்கு புலிகள் கடும் எதிர்ப்பை தந்திரோபாயமாகக் காட்டியதனால் படைகளின் முன்னணி வலுவுள்ள அணிகளை எல்லாம் களமிறக்கியிருந்தன. அப்படைகளே அதிகம் சேதப்பட்டு இறந்தும், களமுனைக்கு வரமுடியாமலும் இருந்தன.

ஆனால் புலிகள் தமது போரிடும் ஆற்றல் மிக்க படையணிகளை இதுவரையும் பாதுகாப்பாகவே வைத்திருப்பதனால் அவர்கள் ஒரு பெரும் தாக்குதலை மேற்கொள்ளும் போது படைத்தரப்பில் போரிடும் ஆற்றல் மிக்க படையினரின் எண்ணிக்கையில் நிச்சயமாக பெரும் வீழ்ச்சியடையும் அதன்போதே புலிகளின் மவுனத்தையும், தந்திரோபாயப் பின்நகர்வையும் சிங்கள தேசம் உணரும். அத்தருணம் எப்போது என்பதே அனைவரினதும் பெரும் கேள்வியாக உள்ளது. அதுவரை புலிகளின் பலம் குறித்த மிக மோசமான ஊகங்கள் அனைவரிடமும் எழத்தான் செய்யும்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..