பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

2006 ஆம் ஆண்டின் - பின் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அதிகளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுளளன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 03 September 2008

2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும்
கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற மோதல்களில் கைப்ப்றப்பட்ட 20 சடலங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இன்று வைக்கப்பட்டு இருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அக்கராயன்குளத்திற்கும் வன்னேரிக்குளத்திற்கும் இடைப்பட்ட 8ம் கட்டை 9ம் கட்டை பகுதிகளிலும், நேற்று முன்தினம் வன்னேரிக்குளம் மற்றும் நாச்சிக்குடா நாகபடுவான் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் 75 படையினருக்கு மேல் கொல்லப்பட்டு 100 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த இருநாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 47 ற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு 50 ற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தமது தரப்பில் 12 படையினர் மட்டுமே பலியானதாக அரசாங்க படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..