பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 04 September 2008

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும் பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈடுபட்டிருக்கலாம் எனவும் அந்த இராணுவ ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் வான் தாக்குதல் நடைபெற்றிருப்பதனை உறுதிப்படுத்திய சிறிலங்கா வான்படை அதிகாரி ஒருவர், புலிகளின் படகு தாக்கியழிக்கப்பட்டதா என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பாரிய படகு தாக்கியழிக்கப்பட்டதாக சிறிலங்கா வான்படையால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..