|
புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறிலங்காப் படையினர்? |
|
|
|
Friday, 05 September 2008 |
|
வன்னியில் சிறிலங்கா படையினரால் பெருமெடுப்பில் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு, பல பிரதேசங்களை புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம், புலிகளை ஏறக்குறைய அழித்து விட்டோம் என்று சிறிலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில், மல்லாவியில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்டிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமது பல இராணுவத்தினர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நிலையில், இக்காணாமல் போன சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் கைகளில் வீழ்ந்து இருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை வன்னியில் படையெடுப்பை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கிய ஆரம்பப் பகுதியை விடுதலைப் புலிகள் ஊடறுத்து துண்டித்திருப்பதாகவும் பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது. இதன் மூலம் வன்னிக்குள் உள்நுளைந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கான ஆயுத, உணவு விநியோகங்களுக்கான தொடர்புகள் துண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாவும் தெரிகிறது.
இவ்வன்னித்தகவல்களை உடனடியாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
நெருடல் இணையம்
|