|
உறவினர்களை பழிதீர்க்கும் படலம் - அம்பாறை தளபதி ராமின் மைத்துனர் சுட்டுக்கொலை! |
|
|
|
Monday, 08 September 2008 |
|
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற குழுவினர் இவரை சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.கொல்லப்பட்டவர் 60அகவையுடைய 5பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.
தற்போது சிறிலங்கா ராணுவத்துக்கும் கருணா குழுவுக்கும் சவாலாக கிழக்கு அம்பாறையில் செயற்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் நெருங்கிய உறவினர்களை தீர்த்துக்கட்டுவதில் அரசாங்கமும் துணை ராணுவக்குழுவும்முழுமூச்சாகஇறங்கியுள்ளது என்பதற்கு நேற்றய இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும்.சில தினங்களின் முன்னர் அம்பாறைதளபதிகளில்ஒருவரானஸ்ரான்லியின் தாயார் தேவராஜா வரதலட்சுமி அம்பாறையில் சுட்டுக்கொல்லப்பட்டது இங்கு நினைவூட்டத்தக்கது.
நெருடல் இணையம்
|