பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

புலிகளின் தாக்குதல்களில் 3 படையினர் பலி; 10 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 September 2008

வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

யாழ். அரியாலை பகுதியில் நேற்று முன்நாள் சனிக்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா பாலமோட்டை பகுதியில் நேற்று முன்நாள் காலை 6:40 மணியளவில் எறிகணைத் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலமோட்டை கல்வெளிக்குளத்தில் நேற்று முன்நாள் முற்பகல் 11:30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார்.

பாலமோட்டையில் நேற்று முன்நாள் பிற்பகல் 4:30 மணியளவில் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார் பரிகாரிகண்டல் பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 2:00 மணியளவில் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

மன்னார் நாச்சிக்குடா தெற்கு பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 3:45 மணியளவில் மோட்டார் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் மேற்கு பகுதியில் நேற்று முன்நாள் மாலை 5:00 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படையினர் இருவர் காயமடைந்தனர்.

காலை 8:30 மணியளவில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

மீண்டும் முற்பகல் 11:45 மணியளவில் நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மணலாறு கிரி இப்பன்வேவ வடக்கு பகுதியில் நேற்று முன்நாள் முற்பகல் 9:45 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..